ராணிப்பேட்ட மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப். 29 வியாழக்கிழமை நடக்கவுள்ளது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் அன்று காலை 10.30 மணியளவில் இக்கூட்டம் நடக்கவுள்ளது. கலெக்டர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன் வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கெலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.