Free training on how to repair Fridge, AC conducted by the central government will start on September 1

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலைவாய்ப்பு இல்லாத, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுய தொழில் செய்ய 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏசி, பிரிட்ஜ் பழுது பார்ப்பதற்கு அளிக்கப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி துவங்கப்படவுள்ளது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சிக்கான பொருட்கள், காலை, மாலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றை வைத்து சுயதொழில் துவங்கலாம். வங்கிக்கடன். பெற்று பழுது பட்டரை வைக்கலாம்.

எனவே, இலவச பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ராணிப்பேட்டை நவல்பூர் எம்.எப்.சாலையில் (சாந்த ஆஞ்சநேயர் கோயில் அருகில்) உள்ள இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனத்தை ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 4 பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றுடன் அணுகலாம் அல்லது 04172-299864/9043629790 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிறுவன இயக்குநர் துர்காபிரிசாத் தெரிவித்துள்ளார்.