ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, எஸ்பி தீபாசத்யன் முன்னிலையில் நேற்று இரவு 7.40 மணியளவில் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்தியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து ரிப்பனை வெட்டி தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் விஸ் வேஸ்வரய்யா (மாவட்ட தலைமையகம்) முத்துக்கருப்பன் (சைபர் கிரைம்) டிஎஸ்பிக்கள் பிரபு ராணிப்பேட்டை, பிரபு அரக்கோணம், இன்ஸ் பெக்டர்கள் சசிகுமார், சதீஷ்குமார், தனஞ்செழியன், சீனிவாசன், விஜய லட்சுமி, சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் காவலர்கள், தீயணைப்புதுறை, சிறைத் துறை, ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் பல்பொருட்களை வாங்கி பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.