வாலாஜா நகர் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதாக வாலாஜா நகராட்சி தலைவர் ஹரிணிதில்லை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹21 லட்சத்தில் மதிப்பில் வாலாஜா நகரில் உள்ள எம்பிடி சாலை, சோளிங்கர் ரோடு அணைக்கட்டு ரோடு, பஜார் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 75 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதனை கண்காணிக்க நகராட்சி அலுவலகத்தில் ஒரே இடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி மற்றும் வாலாஜா காவல் நிலையத்திலிருந்து கண் காணிக்கப்படும். திருட்டு மற்றும் விபத்துகளை கண்காணிக்க இது பேருதவியாக இருக்கும் எனவும் இந்த பணிகள் விரைவில் நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது நகராட்சி துணைத்தலைவர் கமலராகவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.