ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (28). திருமணம் ஆகாதவர். புறாக்கள் வளர்த்து விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை ஊரிலிருந்து வாலாஜாபேட்டைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். படவேடு அம்மன் கோயில் அருகே எதிரே சோளிங்கர் நோக்கி சென்ற லாரி மீது இவரது பைக் மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துகுறித்து விசாரித்து வருகின்றனர்.