பிரதமரின் 'கிசான் சம்மான்' திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இது வரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 12வது தவணை பெறுவதற்கு சிட்டா, ஆதார் எண், வங்கிக்கணக்கு எண், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவை விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு சரிபார்க் கப்படுகிறது.

எனவே உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத விவசாயிகள் செப்.15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வங்கி கணக்கில் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.