Worker arrested for stealing drilling rod worth 50 thousand


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காட்பாடி தாலுகாவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வாசன்(22). சீனி இவர் தற்காலிக பணி யாளராக பணிபுரிந்து வருகிறார். 

இரவு நேர வேலை முடித்துவிட்டு அதிகாலை வெளியே வந்த சீனிவாசனை செக்யூரிட்டி ரங்கநாதன் முழு சோதனை செய்தார். அப்போது சீனிவாசன் காலில் ஷூ சாக்ஸின் உள்ளே 750 ஆயிரம் மதிப்பிலான 7 ட்ரில்லிங் ராடுகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கொண்டபாளையம் காவல் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் துணை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். 

அதைத் தொடர்ந்து தனியார் கம்பெனி காவலர் ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.