Vinayagar Chaturthi festival special worship at Ratnagiri Balamurugan temple



விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு மகாகணபதி, வரசித்தி விநாயகர் மற்றும் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மகாகணபதி, வரசித்தி விநாயகர் மற்றும் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயக சதுர்த்தி விழா அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விழா நடந்தது. கொரோனா தொற்று குறைந்தையடுத்து, இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கோயில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.