Thiruvilakku Puja on the occasion of Valarpirai Panchami at Ratnagiri Varahi Amman Temple
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வளர்பிறை பஞ்சமி அன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
வளர்பிறை பஞ்சமியில் வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அன்று வழிபாடு செய்தால் பலமடங்கு பலன்களை தரவல்லது என பொதுமக்கள் வழிபாடு செய்கின்றனர்.
அதே போல் நேற்று வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு ரத்தினகிரியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புபூஜை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மாதுளம் பழத்தில் விளக்கேற்றி அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை செய்து வாராஹி அம்மனை வழிபட்டனர்.
வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.