SP orders 3 special forces to patrol with guns to catch serial robbers in Arakkonam area
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை 10 சம்பவங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயியுள்ளது. இதனால் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் அரக்கோணம் பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காகவும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கவும் டிஎஸ்பி பிரபு மேற்பார்வையில் 3 தனிப்படை அமைத்து எஸ்பி தீபாசத்யன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்பி கூறுகையில், 'அரக்கோணம் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தலா 1 எஸ்ஐ உள்பட 4போலீசார் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள். மேலும் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதே போல் அனைத்து காவல்நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.