குறள் : 880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
மு.வ உரை :
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
கலைஞர் உரை :
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது
சாலமன் பாப்பையா உரை :
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.
Kural 880
Uyirppa Ularallar Mandra Seyirppavar
Semmal Sidhaikkalaa Thaar
Explanation :
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.
Horoscope Today: Astrological prediction for September 22 2022
இன்றைய ராசிப்பலன் - 22.09.2022 | Indraya Nalla Neram | Indraya Raasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
22-09-2022, புரட்டாசி 05, வியாழக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.18 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 02.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 22.09.2022 | Today rasi palan - 22.09.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உணடாகும். பொருளாதார பிரச்சினை ஓரளவு குறையும்.
ரிஷபம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.
கடகம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.