குறள் : 876
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
மு.வ உரை :
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும் தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
கலைஞர் உரை :
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்
சாலமன் பாப்பையா உரை :
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
Kural 876
Theranunth Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital
Explanation :
Though (ones foe is) aware or not of ones misfortune one should act so as neither to join nor separate (from him).
Horoscope Today: Astrological prediction for September 18 2022
இன்றைய ராசிப்பலன் - 18.09.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panhangam | Indraya Nalla Neram
18-09-2022, புரட்டாசி 01, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.33 வரை பின்பு தேய்பிறை நவமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.10 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.இன்றைய ராசிப்பலன் - 18.09.2022 | Today rasi palan - 18.09.2022
மேஷம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்திலும் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
மிதுனம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் சேரும்-.
கடகம்
இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.
கன்னி
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தினரிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கைக்கு கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். சகோதர சகோதரி வகையில் சிறு மனவருத்தம் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் முழு கவனத்துடன் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி அடையமுடியும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.