குறள் : 889

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு

மு.வ உரை :

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும் ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

கலைஞர் உரை :

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்

சாலமன் பாப்பையா உரை :

எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

Kural 889

Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu

Explanation :

Although internal hatred be as small as the fragment of the sesamum (seed) still does destruction dwell in it.

Horoscope Today: Astrological prediction for October 01 2022

இன்றைய ராசிப்பலன் - 01.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

01-10-2022, புரட்டாசி 14, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 08.47 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 01.10.2022 | Today rasi palan - 01.10.2022


மேஷம்

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். தொழில் வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். 

மிதுனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் சம்பந்தமாக போட்ட திட்டங்களில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். எதிலும் நிதானம் தேவை.

கன்னி

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.

துலாம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.

கும்பம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001