53 vehicles auctioned at Ranipet District Transport Office for ₹16.50 lakh

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இணக்க கட்டணம் நிலுவைக்காக சிறை பிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக பலமுறை நினைவூட்டு கடிதம் அனுப்பியும் வாகன உரிமையாளர்களால் விடு விக்கப்படாத 9 பைக்குகள், 15 ஆட்டோக்கள், 2 டூரிஸ்ட் வாகனங்கள், ஒரு கழிவுநீர் அகற்றும் வாகனம். ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் என மொத்தம் 53 வாகனங்கள் விலை நிர்ணயக் குழுவினரால் பொது ஏலம் விடப்பட்டது. 

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில், வேலூர் மோட்டார் வாகன பராமரிப்பு துறை தானியங்கி பொறியாளர் பாலதண்டாயுதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகதுணை மேலாளர் சந்திரசேகரன், மோட்டார்வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், சென்னை, வேலூர், அரக்கோணம்,சேலம், ராணிப்பேட்டை, ஆற்காடு, விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜிஎஸ்டி கணக்கு உள்ளவர்கள் மட்டும் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.

அதன்படி. 53 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டதில் ₹14 லட்சம் மற்றும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் ₹16.50 லட்சம் கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை வட்வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தெரிவித்தார்.