ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் உலக நன்மை வேண்டி 18ம் படி பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் மணியம்பட்டு சபரி நகரில் உள்ள ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் உலக நன்மை வேண்டியும் மற்றும் புரட்டாசி மாதத்தை யொட்டியும் 18ம் படி பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. 

குருசாமி ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி 18 படிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து அத்தாழ பூஜையும் நடந்தது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

விழா ஏற்பாடுகளை கோயில் குருசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.