சங்கட ஹரசதுர்த்தியை முன்னிட்டு சோளிங்கர் கமல விநாயகர் கோயிலில் 108 தேங்காய்க ளால் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கமல விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர் மாலைகள் மற்றும் 108 தேங்காய்களால் கமல விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர் வாகத்தினர் செய்திருந்தனர்.