ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த சென்னை சமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில் நேற்று மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் தப்பிச் சென்றார்.
மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான தனிப்படை விஜயகுமாரை இன்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.