✈ 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது.
🎬 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினேட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
நினைவு நாள் :-
♕ 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வேல்ஸ் இளவரசி டயானா மறைந்தார்.
பிறந்த நாள் :-
மரியா மாண்ட்டிசோரி
💉 இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
💉 நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றை கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். இதன் மூலம் குழந்தைகள் பாடங்களை எளிதாகக் கற்றனர். இந்த முறை உலகெங்கும் பரவியது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தன. அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.
💉 சுமார் 200 ஆண்டுகளின் கல்வி முறை குறித்து ஆராய்ந்தார். பல நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது. புதுமைக் கல்வித் திட்டத்துக்கான கோட்பாடுகளை 1897-ல் உருவாக்கினார்.
💉 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939-ல் இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மாண்ட்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார். இவர் இந்தியா என் 2-வது வீடு என்பார்.
💉 இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மாண்ட்டிசோரி 82-வது வயதில் (1952) மறைந்தார்.
ஜஹாங்கீர்
♔ முகலாயப் பேரரசின் மன்னர் ஜஹாங்கீர் 1569ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்தார். ஜஹாங்கீர் அவரது ஆட்சிகாலத்தை அவர் கண்ட நீதியின் முக்கியத்துவத்துடன் தொடங்குவதற்கு முடிவெடுத்தார்.
♔ அவரது தந்தையை போன்றே வெற்றிகளைப் பெறுவதன் மூலம் ஜஹாங்கீரும் முகலாயர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களை அதிகரித்தார். மீவார் ஆட்சியுடன் இருந்த நூற்றாண்டு கால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததிற்கு ஜஹாங்கீரே பொறுப்பாவார்.
♔ அக்பர் வெற்றிகொள்ளத் தவறிய கங்கிரா கோட்டையை கைப்பற்றுவதற்கு ஜஹாங்கீர் எண்ணியிருந்தார். இதன் விளைவாக கோட்டை முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகை 14 மாதங்களுக்கு நிலைத்திருந்தது. மேலும் 1620ஆம் ஆண்டு கோட்டை ஆட்சிக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
♔ 1627ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஜஹாங்கீர் காஷ்மீரில் இருந்து வரும் வழியில் இறந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.
1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.
1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.
1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.
1782 – திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர்.[1]
1795 – முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.
1858 – பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.[1]
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.
1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.
1918 – முதலாம் உலகப் போர்: நூறு நாட்கள் குற்றம்: ஆத்திரேலியப் படைகள் செயிண்ட்-குவெண்டின் மலைப் போரில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டன.
1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1940 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செர்பியத் துணை இராணுவப் படைகள் செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.
1945 – ஆத்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1949 – அல்பேனியாவில் கிரேக்க சனநாயக இராணுவம் பின்வாங்கியது. கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.
1958 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.
1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.
1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் உயிரிழந்தனர்.
1987 – தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.
1993 – உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.
1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 – வேல்சு இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 – வட கொரியா தனது முதலாவது செயற்கைக்கோளை ஏவியது.
1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர்.
1999 – மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் காயமடைந்தனர்.
2005 – பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.
2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.
2011 – திக்குவல்லை கலவரம்: முசுலிம்களின் நோன்புப் பெருநாளன்று இலங்கையில் தென்மாகாணத்தில், திக்குவல்லை எனும் இடத்தில் முசுலிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் மூண்டது.
2016 – பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானித்ததில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
இன்றைய பிறப்புகள்
12 – காலிகுலா, உரோமைப் பேரரச்ர் (இ. 41)
1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)
1569 – ஜகாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627)
1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர், மருத்துவர் (இ. 1952)
1874 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (இ. 1949)
1880 – விலெமினா, டச்சு அரசி (இ. 1962)
1896 – மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, தமிழகப் பதிப்பாசிரியர், படைப்பாளர் (இ. 1985)
1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
1907 – ரமன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (இ. 1957)
1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)
1923 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)
1919 – அம்ரிதா பிரீதம், இந்தியக் கவிஞர் (இ. 2005)
1944 – கிளைவ் லொயிட், கயானா துடுப்பாட்ட வீரர்
1947 – சொம்ச்சாய் வொங்சவாட், தாய்லாந்தின் 26வது அரசுத்தலைவர்
1949 – அக் பொலிட்சர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1949 – ரிச்சர்ட் கியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1955 – லாலுபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி
1956 – சாய் இங்-வென், சீனக் குடியரசின் அரசியல்வாதி
1963 – ரிதுபர்னோ கோஷ், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2013)
1969 – ஜவகல் ஸ்ரீநாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1970 – யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா
1970 – ஸாக் வார்ட், கனடிய நடிகர், தயாரிப்பாளர்
1977 – ஜெஃப் ஹார்டி, அமெர்க்க மற்போர் வீரர், பாடகர்
1979 – யுவன் சங்கர் ராஜா, இந்திய இசையமைப்பாளர், பாடகர்
இன்றைய இறப்புகள்
1814 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (பி. 1738)
1919 – ஆபிரகாம் பண்டிதர், தமிழகத் தமிழிசைக் கலைஞர் (பி. 1859)
1920 – வில்கெம் உண்ட், செருமானிய மருத்துவர், மெய்யியலாளர் (பி. 1832)
1950 – சு. சி. பிள்ளை, இந்தியக் கணிதவியலாளர் (பி. 1901)
1953 – மங்கலங்கிழார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1895)
1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1882)
1973 – ஜான் போர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1894)
1986 – ஹென்றி மூர், ஆங்கிலேயச் சிற்பி (பி. 1898)
1989 – புதுவை சிவம், புதுவை எழுத்தாளர், கவிஞர், இதழாளர் (பி. 1908)
1995 – பியான்ட் சிங், பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1922)
1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)
2000 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (பி. 1927)
2012 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (பி. 1925)
2014 – சத்திராசு லட்சுமி நாராயணா, இந்திய இயக்குநர் (பி. 1933)
2020 – பிரணப் முகர்ஜி, 13வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1935)
இன்றைய சிறப்பு நாள்
விடுதலை நாள் (கிர்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)
விடுதலை நாள் (மலாயா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)
விடுதலை நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)
தேசிய மொழி நாள் (மல்தோவா)