ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் மாணவர் ஐ.நா. மாதிரி மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
மாநாட்டு தொடக்க விழாவுக்கு ஜி.கே. உலகப் பள்ளி நிர்வாக இயக்குநர் வினோத் காந்தி, மாநாட்டு இயக்குநர் தீபக் நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தார். செயல் இயக்குநர் சந்தோஷ் காந்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராம்குமார் வரவேற்றார்.
தொடக்க விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 26, 27, 28) ஆகிய 3 நாள்கள் நடைபெறும் மாநாட்டில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்று நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள், அரசியலமைப்பு, சர்வதேச உறவுகள், உலக அரசியல் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடத்துகின்றனர். மாநாடு நிறைவு விழாவில் சிறப்பான பங்களிப்பு செய்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். ஏற்பாடுகளை பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சி.நேரு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.