தேவையானவை:
- முட்டை - 4.
- பெரிய வெங்காயம் - 2,
- நாட்டு தக்காளி - 3,
- பூண்டு 6 பல்
- மிளகாய்தூள் - முக்கால் டீஸ்பூன்,
- தனியா தூள் - கால் டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
- உப்பு - அரை டீஸ்பூன்,
- மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு,
செய்முறை
முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள்: தக்காளி. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி. விரும்பினால் சிறிது சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்குங்கள். மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, எல்லாம் சேர்ந்து "தளதளவென வரும்போது, முட்டையை மேலும் கீழும் கீறி, மசாலாவில் போட்டு நன்கு கிளறி, மல்லித்தழை தூவி இறக்குங்கள்.
சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பிரமாதமான சைட்-டிஷ்.