சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (65), விவசாயி. இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மீண்டும் அவருக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த வினாயகம் கடந்த 17ம் தேதி தனது வீட்டின் மாடியில் தூக்குமாட்டிக் கொண்டார். சத்தும் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வினாயகத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு அவர் 22ம் தேதி இரவு 9 மணிக்கு இறந்தார்.
இது குறித்து வினாயகம் மகன் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சோளிங்கர் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.