Mysterious assailants have stolen jewelery and money from the hotel owner's house in broad daylight near Arakkonam


அரக்கோணம் அருகே பட்டப்பகலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் சாலை கிராம கூட்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை சரவணன் வீட்டை பூட்டி கொண்டு தனது குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சென்றார். மாலை அனைவரும் வீடு திரும்பினர். பின்னர், வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக நேற்று வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.