குறள் : 856
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
மு.வ உரை :
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
கலைஞர் உரை :
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்
சாலமன் பாப்பையா உரை :
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
Kural 856
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu
Explanation :
Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
Horoscope Today: Astrological prediction for August 29 2022
இன்றைய ராசிப்பலன் - 29.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
29-08-2022, ஆவணி 13, திங்கட்கிழமை, துதியை திதி பகல் 03.21 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திரம் நட்சத்திரம் இரவு 11.04 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 29.08.2022 | Today rasi palan - 29.08.2022
மேஷம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
ரிஷபம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் பொறுமையாக செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும்ழழாழழ வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001