Grievance hearing from the beneficiaries of the Prime Minister's Housing Scheme


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யூனியனுக்கு உட்பட்ட ரெட்டி வலம், சயனபுரம் உள்ளிட்ட கிராம பஞ்.களில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி கலந்து கொண்டு பயனாளிகளிடம் பேசினார். அப்போது 2016 முதல் 2022 வரை பஞ்சாயத்துகளில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து கேட்டறிந்தார். இத்திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக் கொண்டு இதுவரை வீடு கட்டும் பணியை தொடங்காதவர்கள் பட்டியலை தயார் செய்து அளிக்கும்படி உத்தரவிட்டார்.

தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்திருந்தால் உடனடியாக அவர்களுக்கு வீடுகள் கட்ட காலம் தாழ்த்தாமல் பிடிஓக்கள் ஆணை வழங்கிட வேண்டும். இதுவரை வீடுகள் கட்டாதவர்களிடம் பணத்தை விரைந்து வசூல் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், பிடிஓக்கள் சிவராமன், வேதமுத்து, சயனபுரம் பிடிசி யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.