Ganesha idols should not exceed 10 feet in height
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:
விழாவின்போது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். வேதியியல் ரசாயனம் கொண்டு வர்ணம் பூசக்கூடாது. சிலை அமைக்கும் கொட்டகைக்குள் முதலுதவி மருத்துவ பெட்டி இருக்க வண்டும். எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொட்டகைக்குள் வைக்க கூடாது. விநாயகர் சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகாமையில் சிலைகள் அமைக்கக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சி பேனர்கள், மதத்தலைவர்கள் பேனர்களோ வைக்கக்கூடாது.
விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் இருந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை. நம்பிக்கை களை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் ஏதும் எழுப்பக்கூ டாது. பொது அமைதிக்கும். பாதுகாப்பிற்கும், மதசார்பின் மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வப்போது வருவாய்த்துறை, காவல்துறை. மாசுக்கட்டுப்பாட்டு துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும். சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்க ளில் மட்டுமே சென்று கரைக்கப் பட வேண்டும்.
மேலும் அனைத்து விழா நிகழ்வுகளையும் மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும். மினிலாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்றிச் செல்ல வேண்டும். சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும்போதும் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் உள்ளாட்சி துறையினர் மூலம் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சிலை கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி துறையினர் சிலை கரைக்கப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் பிளாஸ்டிக் இல்லாத விநாயகர் சதுர்த்தி விழா நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் டிஆர்ஓ குமரேஸ்வரன், எஸ்பி தீபா சத்யன், ஏடி எஸ்பி முத்துகருப்ப சாமி, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா,டிஎஸ்பி பிரபு மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.