ராணிப்பேட்டை மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை அனுமதித்துள்ள நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Ganesha idols should be dissolved only in permitted water levels in Ranipet district



முதல்வரின் நல்லாட்சியில் சுற்றுச் சூழல் பாது காப்பு நடவடிக்கைகளில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை உள்ளது. நீர்நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.

நீர்நிலைகளை பாது காக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச் சூழலை கீழ்கண்ட நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, பாதுகாக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத. ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி, தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயனம் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது.

விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் கரைக்க அனு மதிக்கப்படும்.

ராணிப்பேட்டை-தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி. ஆற்காடு - ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி, சோளிங்கர்-பெரிய ஏரி, அரக்கோணம் - மங்கம்மாபேட்டை ஏரி, மாவேறு ஏரி.

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண் டாடப்பட வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.