A cow that fell into a well was rescued alive

மாசாப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் பூவரசன். நேற்று, இவரது பசு மாடு அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்குள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொது மக்கள், உடனடியாக ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. சுமார் 30 நிமிடம் போராடி பசுவை உயிருடன் மீட்டு பூவரசனிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த பசுவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.