Vehicle accident near Walajaper 7 Women Police Injured who came to the rescue of ID raid

ஆம்பூர் வருமான வரித்துறை சோதனை பணிக்கு பாதுகாப்புக்காக வந்த 7 பெண் போலீசார் சென்னை திரும்பும் வழியில் வாலாஜா அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் கடந்த 4 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நேற்று வருமானவரித் துறையினர் தங்கள் சோதனையை நிறைவு செய்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்னை ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் நேற்று மாலை சென்னை திரும்பினர்.

இதில் பெண் போலீசார் சென்ற வாகனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா அடுத்த சுமைதாங்கி கிராமம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் 7 பெண் போலீசார் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களை நேற்று இரவு ராணிப்பேட்டை எஸ்பி தீபத சத்யன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.