Near Solingar, the Nandimangalam lake was filled to the brim

சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மழையின் அளவு 142 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவும் 26 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதன் காரணமாக சோளிங்கர் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

இந்நிலையில் சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் ஏரிநிரம்பி கடைவாசலில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நரசிம்மன் தலைமையில் கிராம மக்கள் கடை வாசலில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதில் ஏரி பாசன தலைவர் மன்னார், ஏரி பாசன மண்டல உறுப்பினர்கள் கோவிந்தசாமி, மணி, ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.