Minister R.Gandhi gave tables and chairs worth ₹6 lakhs to a government school in Ranipet Karai
ராணிப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு 36 லட்சம் மதிப்பில் மேஜைகள் மற்றும் நாற்காலிகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை காரை பகுதியில் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தனது சொந்த நிதியில் இருந்து மேஜைகள் மற்றும் நாற்காலிகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி, நேற்று 6 லட்சம் மதிப்பில் 50 மேஜைகள் மற்றும் நாற்காலிகளை அமைச்சர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பள்ளிக்கு வழங்கி மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அமைச்சரின் மனைவி கமலா காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஜி.கே. உலக பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, ஷில்பா காந்தி ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா,மாவட்ட ஊராட்சி குழுதலைவர் ஜெயந்தி திரு மூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர செயலாளர் பூங்காவனம், கவுன்சிலர்கள் வனரோஜா, மாணிக்கம், ஆதி திராவிட நலக்குழு தலைவர் மோகன்தாஸ், உறுப்பினர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா, துணைத் தலைவர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.. பள்ளி தலைமை ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.
தொடர்ந்து நடந்த விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி, சவூதி அரேபியாவில் பணிபுரிந்து இறந்தவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து வரப்பெற்ற கருணைத்தொகை முகமது ஜக்காரியா சுல்தான் சாகேப்பின் மனைவி ஆஜி பாத்திமா என்பவருக்கு 31,41,024க்கான காசோலை, ஜாகீர் உசேன் தந்தை உசையத் முகமது என்பவர் பணிபுரிந்த வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து வரப் பெற்ற நிலுவைத்தொகை 75,81.189க்கான காசோலையை வழங்கினார்.