குறள் : 852

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

மு.வ உரை :

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

கலைஞர் உரை :

வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்

சாலமன் பாப்பையா உரை :

நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

Kural 852

Pakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi
Innaasey Yaamai Thalai

Explanation :

Though disagreeable things may be done from (a feeling of) disunion it is far better that nothing painful be done from (that of) hatred.

Horoscope Today: Astrological prediction for August 25 2022

இன்றைய ராசிப்பலன் - 25.08.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


25-08-2022, ஆவணி 09, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 10.38 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூசம் நட்சத்திரம் மாலை 04.16 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 25.08.2022 | Today rasi palan - 25.08.2022


மேஷம்

இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். வீண் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தயோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.

சிம்மம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். கடன்கள் குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு இருக்கும் மனக்குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபகாரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.

மீனம்

இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001