Drug prevention awareness program near Arcot
ஆற்காடு தாலுகா காவல் நிலையம் சார்பில் போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆற்காடு அடுத்த புதுப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி பிரபு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் காண்டீபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எஸ்பி தீபாசத்யன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப் பொருட்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
மேலும் போதைப் பொருள் விற்பவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்களும் பறிமுதல் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே போதைப்பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கோ, 7530026333 என்ற டோல் பிரீ எண்ணிற்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.