ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

Free Coaching Class Collector Information for Group-1 Examination in District Employment Office



இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்-1 (தொகுதி-1) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்ப தாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 29ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலை பேசிவாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்க வேண்டும். லவச பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172-291400 அல்லது நெ.9. ஆற்காடு சாலை, பழைய பிஎஸ்என்எல் அலுவலகம், ராணிப்பேட்டை பழையபேருந்து நிலையம், தலைமைதபால் நிலையம் அருகில்) மின்னஞ்சல் முகவரி ranipetjobfair@gmail.com ல் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக் கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்கள் பயன்பெறும் விதமாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக https:// tamilnaducareerservices. tn.gov.in இணைய தளத்தில் மென்பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறுமாற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.