ஆற்காடு அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 people, including her husband, were injured when a car collided with a Sogam tipper lorry near Arcot
தர்மபுரி டி.ஏ.எம். எஸ் காலனியை சேர்ந்தவர் பாலாஜி(42). இவரது மனைவி கவிதா (39). இவர்களது மகன் தருண்வர்ஷன்(18). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவருக்கான மாற்றுச் சான்றிதழை வாங்குவதற்காக நேற்று முன்தினம் பாலாஜி. கவிதா, தருண்வர்ஷன் ஆகியோர் காரில் சென்னைக்கு சென்றனர். காரை டிரைவர் நேதாஜி என்பவர் ஓட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி மேம் பாலத்தில் முன்னால் சென்ற டிப்பர் லாரியை கார் முந்தி செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் கார் மோதிவிபத் துக்குள்ளானது. இதில். பாலாஜி உட்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்விஷாரம் தனியார் மருத்துவம்னைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கஸ்தம்பாடியை சேர்ந்த டிப்பர் லாரியின் டிரைவர் பிரபு என்பவர் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.