✍️ இவர் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்தியக் குடியுரிமை பெற்றவர்.
✍️ 1950 ஆம் ஆண்டு கல்கத்தாவில் "Missionaries of Charity" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.
✍️ அதன்மூலம் 45 ஆண்டுகள் ஏழை எளியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொண்டாற்றினார்.
✍️ வேறொரு நாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையாக இறந்த ஒரே நபர் அன்னைத் தெரசா மட்டுமே.
அன்னை தெரசா பெற்ற விருதுகள்:
♻️இவருக்கு 1962 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
♻️இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
♻️மேலும், 1980-ல் இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது பெற்றார்.
♻️இவர், 2003-ல் 'அருளாளர்'( grace) பட்டம் பெற்றார்.
♻️இவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு, 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
♻️அவர் பிறந்த 100 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இந்திய அரசு 28 ஆகஸ்ட் 2010 அன்று சிறப்பு ₹ 5 நாணயத்தை (தெரசா இந்தியா வந்தபோது வைத்திருந்த பணம்) வெளியிட்டது.
💫அன்னை தெரசாவின் பொன்மொழிகள்:
இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
வெறுப்பது யாராக இருந்தாலும். நேசிப்பது நீங்களாக இருங்கள்...
அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்.