குறள் : 828

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து

மு.வ உரை :

பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும் பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

கலைஞர் உரை :

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்

சாலமன் பாப்பையா உரை :

பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

Kural 828

Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu

Explanation :

A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

Horoscope Today: Astrological prediction for August 01, 2022



இன்றைய ராசிப்பலன் - 01.08.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

01-08-2022, ஆடி 16, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 05.13 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரம் நட்சத்திரம் மாலை 04.06 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. நாக சதுர்ததி விரதம். ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம். 

இராகு காலம் | Indraya Nalla neram 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

சூரிய உதயம் 6.3 கடக லக்கனம் இருப்பு நாழிகை 2 விநாடி 50

இன்றைய ராசிப்பலன் - 01.08.2022 | Today rasi palan - 01.08.2022

மேஷம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க முடியும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். சிலருக்கு அசையா சொத்துக்களால் வீண் அலைச்சலும், பண விரயங்களும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 

துலாம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

தனுசு

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலப் பலனை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

கும்பம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001