அரக்கோணம் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த சங்கர் (27) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.
இந்தத் தகவல் கிடைக்கப் பெற்ற அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி சங்கர் மற்றும் சிறார் திருமணத்துக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஜெயலட்சுமி (37), பூங்கொடி (60), ராஜி (62) ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.