Heavy rains in 3 districts: Antiyappanur dam full!Maximum 75 mm in Ammur.  Register!!

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் திருப்பத்தூரில் உள்ள ஆண்டியப்பனூர் அணை நிரம்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக அம்மூர் பகுதியில் 75 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூர் மலை போன்ற பகுதிகளிலும், ஆந்திர வனப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களாகவே கனத்த மழை பெய்து வருகிறது.

அதன்படி நேற்று இரவிலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மூர் பகுதியில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல்
கலவையில்72, 
அரக்கோணத்தில் 68, 
ஆற்காட்டில் 64, 
வாலாஜாபேட்டையில் 57 மில்லிமீட்டர் 

மழை பதிவாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் மட்டும் நேற்று 64 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஆண்டியப் பனூர் அணை நிரம்பியுள்ளது. 8 மீட்டர் உயரமும், 112.20 கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த அணை கடந்த வருட மழையின்போதும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. ஆண்டியப்பனூர் அணை நிரம்பியதால் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும்.

இதேபோல் திருப்பத்தூரில் உள்ள பெரிய ஏரியும் நிரம்பியது.

வேலூர் மாவட்டத்திலும் நேற்று இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் 3 மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.