சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவல்கத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா தலைமை தாங்கினார்.

பிடிஓ தனசேகர் முன்னிலை வகித்தார். ஒன்றிய சமூகநல திட்ட விரிவாக்க அலுவலர் சுகந்தி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி சோளிங்கர் ஒன்றியத்தைச் சேர்ந்த 141 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்க காசுகள் வழங்கினார்.

மேலும் அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைத்துள்ளது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர்கள் அபர்ணா, ஆனந்த ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.