குறள் : 793

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு

மு.வ உரை :

ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை :

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

Kural 793

Kunamum Kutimaiyum Kutramum Kundraa
Inanum Arindhiyaakka Natpu

Explanation :

Make friendship (with one) after ascertaining (his) character birth defects and the whole of one�s relations.

Horoscope Today: Astrological prediction for June 27, 2022

இன்றைய ராசிப்பலன் - 27.06.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


27-06-2022, ஆனி 13, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 04.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla neram 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 27.06.2022 | Today rasi palan - 27.06.2022

மேஷம்

இன்று நீங்கள் சோர்வுடனும், உற்சாகமின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மிதுனம்

இன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.

துலாம்

இன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தனுசு

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு அதிகாரி மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001