Ranipettai Municipal Warning Occupancies will be removed from 17.05.2022

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தெரு மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பங்க், ஜெனரேட்டர்கள், வாகனங்கள் பழுது பார்த்தல், டீ கடை மேடை, தள்ளுவண்டிகள், அடுப்புகள் என பல்வகைப்பட்ட தற்காலிக / நிரந்தர கடைகள் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும், மழைநீர் வடிகால்வாய்களின் மீது மேடைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளுக்கு மிகுந்த இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. 

எனவே, தெரு, சாலைகள் மற்றும் கால்வாய்கள் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் 11.05.2022-க்குள் தாங்களாகவே முன்வந்து இந்த தற்காலிக/ நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள தினசரி நாளிதழ் மற்றும் ஒலிபெருக்கி மூலமாக உரிய அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

ஆதலால் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாதவர்கள் உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டியது. இல்லையெனில் 17.05.2022 செவ்வாய்கிழமை முதல் நகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு மேற்படி தற்காலிக / நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், மேற்படி செலவுத் தொகை தங்களிடமிருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.