அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென பலத்த இடி, மின்னல், காற்றுடன் லேசான மழை பெய்தது.

இதனால் மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில் புதுகேசாவரம் காலனியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்னல் தாக்கி இறந்தது.

இதுகுறித்து அரக்கோணம் தாசில் தார் பழனிராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விசாரித்து வருகிறார்.