Sholingur Lakshmi Narasimhar temple bill income Rs 54 lakh

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கோவில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. 

இதில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில் ஊர்க்கோவிலான பக்தோசித பெருமாள் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல் மற்றும் திருப்பணி உண்டியல் என 16 உண்டியல்களை உதவி ஆணையர் முன்னிலையில் ஊர்கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் 54 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயும், 158 கிராம் தங்கம், 515 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகசெலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், பொறியாளர் கிஷோர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.