குறள் : 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
மு.வ உரை :
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
கலைஞர் உரை :
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.
Kural 755
Arulotum Anpotum Vaaraap Porulaakkam
Pullaar Purala Vital
Explanation :
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
Horoscope Today: Astrological prediction for May 20, 2022
இன்றைய ராசிப்பலன் - 20.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
20-05-2022, வைகாசி 06, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.29 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 01.18 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 01.18 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla neram
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 20.05.2022 | Today rasi palan - 20.05.2022
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவியால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 08.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எடுக்கும் காரியங்களில் சில தடை தடங்கலுக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 08.45 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ளவர்களின் தொடர்பால் நற்பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக சிலருக்கு மன உளைச்சல் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் வேயை£ட்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். தொழிலில் இ-ருந்த பொருளாதார பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
மீனம்
இன்று உங்கள் குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். வண்டி, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் சிறு சிறு முயற்சிகளும் அனுகூலப் பலனை அளிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001