குறள் : 743
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
மு.வ உரை :
உயரம் அகலம் உறுதி பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
கலைஞர் உரை :
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.
சாலமன் பாப்பையா உரை :
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.
Kural 743
Uyarvakalam Thinmai Arumaiin Naankin
Amaivaran Endruraikkum Nool
Explanation :
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz. height breadth strength and inaccessibility.
Horoscope Today: Astrological prediction for May 07, 2022
இன்றைய ராசிப்பலன் - 07.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
07-05-2022, சித்திரை 24, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.57 வரை பின்பு வளர்பிறை சப்தமி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 12.18 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Nalla neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 07.05.2022 | Today rasi palan - 07.05.2022
மேஷம்,
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். உறவினர்களுடன் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலத்தை அடையலாம்.
ரிஷபம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம்
இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் மன மகிழும் மாற்றங்கள் ஏற்படும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வரும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ரீதியாக உள்ள நெருக்கடிகள் குறையும்.
கன்னி
இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நட்பு மன ஆறுதலை தரும். அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.
விருச்சிகம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே உங்களது செயல்களில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
மகரம்
இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியான விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
மீனம்
இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001