தமிழகத்தில் அரசு பஸ்களில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில், அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று, சட்டசபையில் கடந்த 5ம் தேதி நடந்த போக்குவரத்து துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்த உத்தரவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். இது குறித்து, வேலுார் மண்டல அரசு போக்கு வரத்து துறை வட்டாரத்தில் கேட்டபோது, இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும்,
அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கண்டக்டர்களுக்கு வாய்மொழி உத்தரவாக தெரிவிக்கப்பட்டது.
இப்போது, அதற்கான உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. வேலுார் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் 231 டவுன் பஸ்கள், 384 புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் எல்லாவற்றிலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று பஸ்களின் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.