Environmental impact by the Ananthalay quarry vibrations Theft of mineral resources; Pregnant women and the elderly suffer
வாலாஜாபேட்டை நகரத்தை ஒட்டியுள்ள அனந்தலை மலையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் கனிமங்கள் திருட்டும் தொடர்கதையாகியுள்ளது.
வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் சர்வே எண் 1/4ல் 430 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 500 அடி உயர மலை இருந்தது. இந்த மலையில் அரசு அனுமதியுடன் 23 ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் மலையை உடைப் பதற்காக வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது.
இதனால் மலையை ஒட்டியுள்ள முசிறி, செங்காடு, செங்காடு மோட்டூர், தகரகுப்பம், வாலாஜாபேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு போன்ற பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டு வீடுகள் இடிந்து போவதும், சுவர்களில் விரிசல் விடுவதும், வெடிச்சத்தம் கேட்டு கால்நடைகள் அரண்டு ஓடுவதும் தொடர்கதையாகியுள்ளது. முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மனரீதியாவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக் கையும் இல்லை. அத்து டன் இந்த மலையில் 200 ஏக்கருக்கு மேல் கல்குவாரிமூலமாக கனிம வளங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாகவும் புகார் எழந்துள்ளத அந்த இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
அத்துடன், இந்த கல்குவாரிகள் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் குவாரியில் வெடி வைப்பதால் ஏற்படும் சத்தத்தால் சுற்றியுள்ள கிராம மக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகின்றனர். மேலும், ஜல்லி கற்கள் உடைப்பதன் மூலம் ஏற்படும் துசியால் விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2015ம் ஆண்டு நடந்த திடீர் ஆய் வின்போது விதிகளை மீறி செயல்பட்டதாக 9 கல்கு வாரிகளுக்கு 30 கோடியே 94 லட்சத்து 24 ஆயிரத்து 642-ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு 2 கல் குவாரிகளும், 19 ஜல்லி உடைக்கும் மிஷின்களும் செயல்பட்டு வருவதாகவும், இதனை பயன்படுத்தி இரவில் அனுமதியின்றி முரம்பு மண் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, கல்குவாரி விஷயத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுத்து, மலையை சுற்றியுள்ள கிராமங்களை பாதுகாப்பதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்.என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.