Collector calls for "Solar Pump Set" farmers at subsidized prices
வாலாஜா தாலுகா செங்காடு பஞ்.ல் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய பம்பு செட் அமைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் நிலத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று முன்தினம் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது அவர் கூறும்போது, மத்திய அரசு நிதியில் 70 சதவீத மானியத்தில் சூரிய ஒளி பம்பு செட் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 7.5 குதிரைதிறன் கொண்ட பம்பு செட் ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 298 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் மானியம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 750 ஆகும். ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 589 ஐ அதாவது 30 சதவீதம் பணத்தை விவசாயி கட்டவேண்டும்.
இந்த நிலத்தில் 340 வாட்ஸ் திறன் கொண்ட 20 சூரிய ஒளி தகடுகளைக்கொண்டு 6,800 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தியாகிறது. மாவட்டத்தில் 9பேர் இத்திட்டத்தில் பயபயனடைந்துள்ளனர். சோலார் மோட்டார் பம்ப் தங்கள் நிலத்தில் அமைக்க விரும்பும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி பயன்பெறலாம் என்றார். செங்காடு பஞ். தலைவர் தேவேந்திரன் வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம், துணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், இன்ஜினியர் ரூபன்குமார், உதவி இன்ஜினியர் ரவிக்குமார், பிஆர்ஓ அசோக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.