Pradhanmantri Aawas Yojana scheme up to 4 lacs


மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வீட்டு வசதி திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை இப்போது 4 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த முடிவு சொந்த வீடு வாங்க திட்டமிடும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என அனைத்து தரப்பு மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு வசதி திட்டம்


நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தரப்பில் இருந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது.

மத்திய அரசு உயர்த்துகிறது தொகையை

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விரைவில் ரூ 2 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது இப்போது வழங்கப்படும் தொகையை விட மூன்று மடங்கு தொகை கூடுதலாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வீடுகள் கட்டும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீடு கட்டுவதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், என ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் மதிப்பீடு குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கட்டுமான செலவுகள்


மணல், சிமெண்ட், கம்பிகள், செங்கல், மற்றும் பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது.

இதனால் கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

உதவித் தொகை 4 லட்சம் உயர்கிறது

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் தங்கள் தரப்பில் இருந்து குறைந்தபட்சம் ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுக்க முடியாது என்று விவாதிக்கப்பட்ட.

இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய, மாநில, அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் 1.20 விலை லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் என்ன நடக்கும்


மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்தால்.

தமிழ்நாட்டில் இருக்கும் பிணந்திண்ணி அரசு ஊழியர்கள் இதில் அதிகப்படியான லஞ்சத்தை எதிர்பார்ப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதால் மனமுடைந்த இளைஞர் இதனைப்பற்றி வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய, மாநில, அரசுகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதில் அரசு ஊழியர்களின் லஞ்சம் என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.