வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (27), அதே ஊரை சேர்ந்தவர் தியாகு (23), ஊரில் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக தியாகு பூண்டியகல் உள்ள கிராமத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், பதிலுக்கு தியாகு மற்றும் அவரது ஆட்கள், திலீப்குமார் ஊரில் காசு வைத்து சூதாட்டம் ஆடும் தகவலை போலீசுக்கு போட்டு கொடுத்ததாக இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாயத்து கவுன்சிலர். வேலு அவர்களிடம் சமாதானம் செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் (30), திலீப்குமார் (27), குணா (22), மற்றொரு செல்வகுமார் ஆகிய 4 பேரும் வேலுவை தாக்கியுள்ளனர். இதில் அவரது 2 பற்கள் உடைந்தது. 

வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார், திலீப் குணா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.